Friday, July 16, 2010

குளோபல் வார்மிங்

தாய் மடி
சூடு
தாங்காமல்
சேய் கூட
அழுதிடும் !
இந்த
பூமிப்பந்து
கனல் சூடு
தாங்காமல்
அழிந்திடுவாளோ!!
தீயின் நாவில்
தீமை அழியட்டும் !
வெப்பத்தின்
சாவில்
மனிதன் வாழட்டும் !!
"தமிழ் இனி
மெல்ல சாகும்" - இது
பாரதியின் வாக்கு !
மனித
அலட்சியத்தால்
"புவி இனி
மெல்ல சாகும்" - இது
என்னுடைய வாக்கு !!
பனிப்பொழிவால்
ஆடை உடுத்தி
அழகு நங்கை
வாழ்ந்து வந்தாள்
என்
அன்னை - அவள்
வேப்பமேனும்
துட்சதணன்
சிறுக சிறுக
பனிப்போர்வையை
துகிலுரிக்க கண்டேன் !!
நம்
தாய் நிர்வாணம்
அடையுமுன்னே - போர்வை
ஒன்றை
தந்திடுவோம் !!
பச்சை பசேல்
என
சேலை ஒன்றை
நெய்திடுவோம் !!
"மரக்கன்று" - இது
நம் மானம்
காக்கும் ஆடை அன்றோ !!
"மரக்கன்று" - இது
நாம் வாழும்
வாழ்வின் அடையாளமன்றோ !!
இந்த
பூமிப்பந்து
தாய் போல்
காத்திடுவோம்!
வரப்பு சண்டை
வாய்கால் சண்டை
எல்லையில் சண்டை - என
வறட்டு சண்டை
போதும் !!
ஒன்று பட்டு
ஒழித்திடுவோம் - புது
வழியை நாமும்
கண்டிடுவோம்!!
பச்சை ஆடை
உடுத்திட
பலப்பல மரக்கன்று
நடவேண்டும் !
மரம் வெட்டும்
மனிதனை
பல மாதம்
பாலை மணலில்
விட வேண்டும் !!
மரச்சோலை
எங்கும் வரவேண்டும் !
மரம் சாலை
எங்கும் நடவேண்டும் !!

ராஜா / 26/1, vellalar street, kannankurichi, salem - 636 008 (TN )









No comments:

Post a Comment