Thursday, August 4, 2022

 கந்தா சரணம்! கதிர்வேலா

சரணம்!
எந்தை சரணம்! இறைவா
சரணம்!
செந்தூர் வாழும் செல்வா
சரணம்!
சிந்தை வாழும் குகனே
சரணம்!
குமரா சரணம் குருவே
சரணம்!
அமரா பதிவாழ் பதியே
சரணம்!
விமல வேதப் பொருளே
சரணம்!
சிந்தை மகிழும் குருவே
சரணம்!
பிரணவமே ஓங்காரனே
சரணம்!
சரணம் சரணம் சண்முகனே
சரணம்!

Tuesday, February 8, 2011











Harish - cool Guy and friendly. I love Harish. I want him to be a Industrialist.

Monday, February 7, 2011

A Golden Opportunity for Jayalakshmi Steel Industry


ஹரீஸ் நல்லவன் !! எனக்கு ரொம்ப பிடிக்கும் !!

Friday, July 16, 2010

குளோபல் வார்மிங்

தாய் மடி
சூடு
தாங்காமல்
சேய் கூட
அழுதிடும் !
இந்த
பூமிப்பந்து
கனல் சூடு
தாங்காமல்
அழிந்திடுவாளோ!!
தீயின் நாவில்
தீமை அழியட்டும் !
வெப்பத்தின்
சாவில்
மனிதன் வாழட்டும் !!
"தமிழ் இனி
மெல்ல சாகும்" - இது
பாரதியின் வாக்கு !
மனித
அலட்சியத்தால்
"புவி இனி
மெல்ல சாகும்" - இது
என்னுடைய வாக்கு !!
பனிப்பொழிவால்
ஆடை உடுத்தி
அழகு நங்கை
வாழ்ந்து வந்தாள்
என்
அன்னை - அவள்
வேப்பமேனும்
துட்சதணன்
சிறுக சிறுக
பனிப்போர்வையை
துகிலுரிக்க கண்டேன் !!
நம்
தாய் நிர்வாணம்
அடையுமுன்னே - போர்வை
ஒன்றை
தந்திடுவோம் !!
பச்சை பசேல்
என
சேலை ஒன்றை
நெய்திடுவோம் !!
"மரக்கன்று" - இது
நம் மானம்
காக்கும் ஆடை அன்றோ !!
"மரக்கன்று" - இது
நாம் வாழும்
வாழ்வின் அடையாளமன்றோ !!
இந்த
பூமிப்பந்து
தாய் போல்
காத்திடுவோம்!
வரப்பு சண்டை
வாய்கால் சண்டை
எல்லையில் சண்டை - என
வறட்டு சண்டை
போதும் !!
ஒன்று பட்டு
ஒழித்திடுவோம் - புது
வழியை நாமும்
கண்டிடுவோம்!!
பச்சை ஆடை
உடுத்திட
பலப்பல மரக்கன்று
நடவேண்டும் !
மரம் வெட்டும்
மனிதனை
பல மாதம்
பாலை மணலில்
விட வேண்டும் !!
மரச்சோலை
எங்கும் வரவேண்டும் !
மரம் சாலை
எங்கும் நடவேண்டும் !!

ராஜா / 26/1, vellalar street, kannankurichi, salem - 636 008 (TN )